கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இனைந்து நடத்தய தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம் 10th ,12th வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு அவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளியே ஏற்படுத்தும் விதமாக 30.11.2013 மாலை:04:30மணிக்கு கொய்யா மஹாலில் நடைபெற்றது.
இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சஹோ.M.A.முஹம்மது நஜுமுதீன் B.E அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சஹோ.J.அப்துல் ரஜாக் அவர்கள் வரவேற்று தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக P.M.காதர் முகைதீன் (வணிக வரி அலுவலர் ப.நி)அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A.அபூபக்கர் சித்திக் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு அக்சஸ் இந்தியாவின் மதுரை மாவட்ட ஆலோசகர் S.ரியாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் அறிவுபூர்வமான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் இருவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் P.M.காதர் முகைதீன் (வணிக வரி அலுவலர் ப.நி)அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A.அபூபக்கர் சித்திக் ஆகிய இருவரும் பரிசுகள் வழங்கினார்கள்.
இறுதியில் A.ராசிக் பரீத் அவர்கள் நன்றயுறை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நுற்றூக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளும் திரளாக கலந்து கொண்டார்கள்.....


Post a Comment