முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் செயற்குழு கூட்டம்

1/19/20140 comments




உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதகலவரம் ஏற்ப்பட்டு  நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் , பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமுமுக தமிழகம் முழுவதும் நிதி திரட்டி வருகிறது .

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர தமுமுக வினர்  கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர் .இது குறித்து நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு வழக்கறிஞரும் மமகவின் நகர செயலாளர்  சகோதரர் தீன் முஹம்மது பேட்டியளித்தார் .

முத்துப்பேட்டையில் தமுமுக வின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் ,முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ,முத்துப்பேட்டை நகர தமுமுக வின் சார்பாக பொது மக்களிடமிருந்து 21,000 ரூபாய் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்  .

மேலும் இந்த நிதியளிப்பு கூட்டம் விரைவில் முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில்  நடைபெற உள்ளதாகவும் , இந்த நிகழ்ச்சியில் தமுமுக வின் மாநில தலைவர் ரிபாயி கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார் .

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தமுமுக வின் முன்னாள் துணை செயலாளர் முஹைதீன்  திருமணத்திற்கு ,மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் ,மனித நேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி உட்பட தலைமைக்கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் .

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முத்துப்பேட்டை வருகை தரும் தலைவர்களுக்கு  மிக சிறப்பான வரவேற்ப்பு அளிப்பதற்கு ,நேற்று நடைபெற்ற தமுமுக வின் செயகுழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார் .
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech