நாகை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை ! !

1/21/20140 comments


 நாகப்பட்டினம் மாவட்டத்தைப் புனித பூமியாக மும்மதத்தினரும் கருதுகின்றனர். இந்துக்களுக்குச் சிக்கல் சிங்கார வேலர் கோவிலும், முஸ்லிம்களுக்கு நாகூர் தர்காவும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணி கோயிலும் இங்குள்ள பிரபலமான புண்ணிய இடங்களாக கருதப்படுகின்றன. இவை தவிர தரங்கம்பாடி கோட்டை, வேதாரண்யம், கோடியக்கரை போன்ற சுற்றுலா மையங்களும், முத்துப்பேட்டையில் அலையாத்தி காடுகளும் என பல முக்கிய இடங்கள் இங்குள்ளன. இவை தவிர போர்த்துக்கீசியரை எதிர்த்துப்போராடிய குஞ்ஞாலி மரைக்காயர் இப்பகுதியில் இருந்ததாகவும் அவர் நினைவாக நாகூரில் குஞ்ஞாலி மரைக்காயர் தெரு உள்ளிட்ட பல வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்ட தொகுதி நாகப்பட்டினம்! இத் தொகுதி 1957-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்த இத்தொகுதி பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் நாகப்பட்டினம் தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்பிற்குப் பின்பு தற்போது நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி(தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதியில் முன்னர் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக கீழ்வேளூர் சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டு நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இங்கு இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் 5 முறைகளும் காங்கிரஸ் 4 முறைகளும் திமுக 4 முறைகளும் அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை: 9,82,352 இதுவரை இந்த தொகுதியில் வென்றவர்களின் விவரம்: 1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரஸ் 1962 - கோபால்சாமி - காங்கிரஸ் 1967 - சாம்பசிவம் - காங்கிரஸ் 1971 - காத்தமுத்து - இ.கம்யூனிஸ்ட் 1977 - எசு.ஜி. முருகையன் - இ.கம்யூனிஸ்ட் 1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக 1984 - மகாலிங்கம் - அதிமுக 1989 - செல்வராசு - இ.கம்யூனிஸ்ட் 1991 - பத்மா - காங்கிரஸ் 1996 - செல்வராசு - இ.கம்யூனிஸ்ட் 1998 - செல்வராசு - இ.கம்யூனிஸ்ட் 1999 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக 2004 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக 2009 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக கடந்த 15 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: மொத்த வாக்குகள் - 9,82,352 பதிவான வாக்குகள் - 7,61,391 விஜயன் (திமுக) - 3,69,915 செல்வராசு (இ.கம்யூ) - 3,21,953 முத்துக்குமார் (தேமுதிக) - 51,376 வீராசாமி(சுயேட்சை) - 8,769 வீரமுத்து(பகுஜன் சமாஜ்) - 5,123 இவர்களைத் தவிர முனுசாமி, தேவதாஸ் ஆகிய இரு சுயேட்சைகளும் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் விஜயன் 47,962 வாக்குகள் வித்தியாசத்தில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசைத் தோற்கடித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech