முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்க பட்டுள்ளார்.

1/12/20140 comments



ரசியல் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, விளையாட்டு துறையாக   இருந்தாலும் சரி, பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும்  சரி, அல்லது கல்வியில் முதன்மையாக வருவதாக இருந்தாலும்  சரி, சாதனைகள் படைப்பதில் நமதூர் இளைஞர்கள்  சளைத்தவர்கள் அல்ல.

இந்த சாதனைகளுக்கெல்லாம் வழு சேர்த்திருக்கிறார் முத்துப்பேட்டையை சேர்ந்த  சகோதரர். AKL. முஹம்மது மன்சூர் IAS, அவர்கள். 

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக மன்சூர் நியமிக்க பட்டுள்ளார்.

முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் எதிரே உள்ளது சகோதரர்  மன்சூர் அவர்களின் வீடு. இவரது தகப்பானாரின் பெயர் மர்ஹூம் சேஹனா (எ) லெப்பை தம்பி மரைக்காயர்  ஆகும்

மதிப்பிற்கும்  மரியாதைக்கும்  உரிய மன்சூர் அவர்களின் தகப்பனார் லெப்பை தம்பி மரைக்காயர்   அவர்கள்தான் முத்துப்பேட்டையின் முதல் பேரூராட்சி தலைவராவார். இவரின் ஆட்சிகாலத்தில் முத்துப்பேட்டை மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளார்.மரைக்காயார் தெரு கோரைஆறு,பட்டறைகுளம் அரசர்குளம்,செக்கடிகுளம்,குண்டாங்குளம்,ஆசாத் நகர் சட்ரஸ் அணை,சில்லாடி   உள்ளிட்டவைகள் இவரின்  ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைகளாகும்.

சேஹனா (எ) லெப்பை தம்பி மரைக்காயர்           அவர்களுக்கு ஒரே மகனாய் பிறந்தார் மன்சூர். தமது இளம் வயதிலேயே எழுத்தாற்றலிலும், பேச்சாற்றலிலும், முன்னோடியாக திகழ்ந்தார் மன்சூர். 
                     
இனிமை, எளிமை, பொறுமை, மற்றும் ஆளுமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருபவர் மன்சூர். கல்வியில் எப்படி அதிக நாட்டம் உடையவரோ, அதே போல்  சன்மார்க்க நெறிகளையும் பின்பற்ற கூடியவர்.  .ஐ வேலை தொழுகை தவறாத மன்சூர் அவர்கள், ஜமாஅத் செல்வதில் அதீக நாட்டம் உடையவர்.

தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னை கிரசென்ட் தனியார் மெட்ரிக் பள்ளியில் முடித்தார் மன்சூர்.

பின்னர் டெல்லியில் உள்ள  இந்திய ஆட்சி பனி அகடாமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

இதனை தொடர்ந்து காரைக்கால் மாவாட்ட துணை ஆட்சியராகவும், பின்பு புதுவை மாநில சுற்றுலா துறை இயக்குனராகவும், புதுவை மாநில சிவில் சப்ளை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் முத்துப்பேட்டை மன்சூர் அவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவராக நியமித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

அன்பு சகோதரர் மன்சூர் அவர்களின் மக்கள் பனி சிறக்க எல்லாம்  வல்ல இறைவனிடம்  துவா செய்வோம். ஆமீன்.
 

நன்றி:முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech