முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கிய ஊழியர் பரபரப்பு

10/22/20140 comments




மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கிய ஊழியர். மீட்டு பைக்கிள் கொண்டு வந்து மருத்துவ மனையில் சேர்த்த மக்கள்.போராடி உயிரை கொண்டு வந்த 
அரசு டாக்டர்.

முத்துப்பேட்டையில் நெஞ்சை உருக்கிய சம்பவம். 

முத்துப்பேட்டை செப் - 09
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் மின்சார பராமரிப்பு ஊழியராக பணியாற்றுபவர் ராஜா என்கிற புதியசெல்வன்(35). இவர் நேற்று மாலை சின்ன கட்சி மரைக்காயர் தெருவில் மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். அதன் கீழே மற்றொரு ஊழியர் கோபி உதவியாக செயல்பட்டு வந்தார். அப்பொழுது ராஜாவை மின்சாரம் தாக்கியது. உடன் அலறல் சத்தத்துடன் மின்கம்பத்திலேயே கயிற்றில் தொங்கினார். இதனை கண்ட ஊழியர் கோபி ஓடி சென்று போரூராட்சியில் மின்சாரத்தை நிறுத்தும் சாதனத்தை எடுத்து வந்து கொத்பா பள்ளி அருகே உள்ள டிரான்ஸ் ஃபாம்மரில் மின்சாரத்தை தடை செய்தார். 

சுமார் 45 நிமிடம் மின்கம்பத்தில் தொங்கிய ராஜாவை அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட முயற்சி செய்து கிழே கொண்டு வந்தனர். உயிரற்ற நிலையில் காணப்பட்ட ராஜாவை ஒரு பைக்கிள் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். உடன் அரசு மருத்துவ மனை டாக்டர் விஜயராஜன் தலைமையில் மருத்துவ குழு நீண்ட நேரம் ராஜாவின் உயிரை கொண்டு வர போராடினர். ராஜாவின் நிலைமை மோசமானதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர்; மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது ராஜாவின் நிலை மோசமானதை அறிந்த முத்துப்பேட்டை அரசு டாக்டர் விஜயராஜன் சேவை மனப்பான்மையுடன் எப்படியும் ராஜாவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் ஆம்புலன்ஸில் ஏறி கூடவே சென்று தொடர்ந்து மருத்துவம் அழித்து கொண்டே சென்றார். டாக்டரின் மனிதநேய செயலால் ராஜாவிற்கு பட்டுக்கோட்டை செல்லும் பொழுது உயிர் வந்தது. பின்னர் தஞ்சாவூர் மருத்தவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது ராஜா சுயநினைவின்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிர் பிழைக்க உதவிய டாக்டர் விஜயராஜனின் மருத்துவ முயற்சியை கண்டு ராஜாவின் உறவினர்களும,; பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் டாக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து டாக்டர் விஜயராஜன் கூறுகையில்: சம்பவம் நடந்து நீண்ட நேரம் ஆகி மருத்துவ மனையில் சேர்த்திருந்தாலும் மிகுந்த அக்கறையுடன் சரியான நேரத்தில் மருத்தவ மனையில் சேர்த்த நபர்களை பாராட்ட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட ராஜாவிற்கு 45 நிமிடம் மூலை பகுதியில் இரத்த ஓட்டம் இல்லாததால் தற்பொழுது உயிரை மட்டும் நானும், மருத்துவ குழுவும் போராடி கொண்டு வந்துள்ளோம்.

தற்பொழுது தஞ்சையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். உழைப்புக்காகவாது கடவுள் அவருக்கு சுயநினைவையும் கொடுக்க வேண்டும் என்றார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த முத்துப்பேட்டையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் உருக்கத்துடன் 
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech