முத்துப்பேட்டை தர்காவுக்கு வந்த கேரள தம்பதியிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து நகை, பணம் திருடப்பட்டது.
திருவாரூர் மாவ ட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற சேக் தாவூது ஆண்டவர் தர்காவுக்கு சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல்லா குட்டி(62), மனைவி ஹதீஜாவுடன் (52) வந்திருந்தார்.
சம்பவத்தன்று இவர்கள் அருகில் உள்ள ஆற்றங்கரை தர்காவில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே 2 வாலிபர்கள், இந்த தம்பதியிடம் தாங்களும் கேரளா தான் என்று பழக்கப்படுத்திக்கொண்டனர்.
பின்னர் தர்கா அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் சிறப்பு தொழுகை நடப்பதாக தம்பதியை அழைத்தனர்.
அவர்கள் சென்ற போது, இருவருக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தனர். அதை அப்துல்லா குட்டி மட்டும் குடித்தார். ஹதீஜாவுக்கு குளிர்பானம் பிடிக்காததால், டீ வாங்கி வந்து அதிலும் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர். இதில் 2 பேரும் மயங்கினர்.
மயக்கம் தெளிந்து பார்த்த போது, ஹதீஜா அணிந்திருந்த 4 பவுன் நகை மற்றும் பேக்கில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த முத்துப்பேட்டை போலீசார் தர்காவிற்கு வந்து தம்பதியிடம் விசாரித்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
Post a Comment