முத்துப்பேட்டை அருகே பறவை வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வன சரகத்துக்குட்பட்ட பெருகவாழ்ந்தான் அருகே உள்ள மண்ணுக்கு முண்டான், கருணாவூர் கிராமங்களில் சட்ட விரோதமாக பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் உத்தரவுப்படி, வனசரக அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனவர் அயூப்கான், வன காவலர் ஜான்சன் கென்னடி, தோட்ட காவலர் சிவநேசன் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கருணாவூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கண்ணிவைத்து மடையான் பறவைகளை பிடித்த கருணாவூர் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர் (28) சிக்கினார். அவரை கைது செய்து அவரிடமிருந்து பறவைகள் மீட்கப்பட்டு ரூ 8ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. அதேபோல் மண்ணுக்கு முண்டான் பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்ணிவைத்து பறவைகளை பிடிக்க முயற்சித்த மாதாகோவில் தெருவை சேர்ந்த விக்டர் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது

Post a Comment