முத்துப்பேட்டையில் அரசு கலை கல்லூரி துவக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய 21வது மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கனகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, தங்க ராசு, குமாரராஜா, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனிவாசன் வரவேற்றார்.
நகர செயலாளர் காளி முத்து கம்யூனிஸ்ட் தியாகி செய்யது உசேன் நினைவு அரங்கத்தில் கொடி ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை ஒன்றிய குழு உறுப்பினர் செல்லதுரை வாசித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலா ளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வீரமணி, செல்லையன், தாயுமானவன், தனவேந்தன், பழனிச்சாமி, தேவகி ஆகியோர் பேசினர்.
இதில் ஒன்றிய செயலாளராக மீண்டும் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒன்றிய குழு நிர்வாகிகள் 15 பேர், மாவட்ட பிரதிநிதிகள் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முத்துப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு தனி வருவாய் தாலுகா அறிவிக்க வேண்டும். முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய த்தை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண் டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி க்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக உரம், பூச்சி மருந்து, விதை போன்ற விவசாய உபகரணங்கள் வழங்கவேண்டும். அதிமுக அளித்த வாக்குறுதிப்படி விலையில்லா அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எல்லா பகுதி மக்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும்.
முத்துப்பேட்டையில் அரசு கலை கல்லூரி துவக்க வேண்டும். திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை பணியை துவக்க வேண்டும். முத்துப்பேட்டையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆறு களில் குவாரி அமைத்து மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். மீன் பிடி தடைக்காலங்களில் உதவி தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து நீர் நிலை களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண் டும். குடியிருப்பு மனை இல்லாதவர்களுக்கு குடிமனை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment