முத்துப்பேட்டை நகரம் ஒரு பதற்றம் நிறைந்த பகுதியாகும். அதனால் முத்துப்பேட்டை நகரம் இரவும் பகலும் பாறாமல் எந்த நேரமும் தீவிர கண்காணிப்பில் காவல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும். சமீப காலமாக மிகவும் அமைதியான சூழ்நிலையில் காணப்படுவதால் காவல் துறை பாதுகாப்பு வாபேஸ் பெறப்பட்டு பொதுமக்கள் சகஜ நிலையில் உள்ளனர். தற்பொழுது இப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது. இதில் குறிப்பாக கடந்த 2-ந் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் லாரி டிரைவரை தாக்கி ஒரு கும்பல் பணம் பறித்த செயல,; 5-ந் தேதி அ.தி.மு.க பிரமுகர் யானை காலிது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் காணமல் போன சம்பவம், 6-ந் தேதி ஜாம்புவானோடை தர்ஹாவில் கேரளா தம்பதினர் அப்துல்லா குட்டி, ஹதீஜா ஆகியோருக்கு மயக்க மருந்து கொடுத்து நூதன முறை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், 8-ம் தேதி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் சீட்டு கவர் கடையில் பட்டபகலில் 33 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆகிய பெரிய சம்பவங்கள் முதல் 10-ந் தேதி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனேசன் என்பவரது ஹோட்டலில் புரோட்டா கல்லை திருடிய சிறிய சம்பவம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரு வாரத்துக்குள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக முத்துப்பேட்டை நகரில் பெருகி விட்டன. அதனால் யாரைப் பார்த்தாலும் பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில் முத்துப்பேட்டை பொது மக்கள் தல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டுகளில் சிறிய கொள்ளை சம்பவங்களை தவிர பெரிய சம்பவங்களான வங்கி வாசலில் வாடிக்கையாளரின் பணத்தைத் துணிச்சலாக பட்ட பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளது.
இது நாள் வரை குற்றவாளிகள் கைது செய்ய படவில்லை என்பதால் காவல் துறை மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை நகரில் சமீப காலமாக சுற்றித்திரியும் ஆடு மாடு போன்ற கால்நடைகளை ஒரு கும்பல் அடிக்கடி திருடி லாரிகளில் கடத்திவரும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பொது மக்களை மேலும் பீதி அடைய வைத்துள்ளது
நன்றி:முகைதீன் பிச்சை நிருபர்

Post a Comment