முத்துப்பேட்டையில் இந்திய தேசிய காங்கிரசின் தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வைரவநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் அன்பு.வே.வீரமணி, மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னால் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் கலந்துக்கொண்டு முத்துப்பேட்டை நகரத்தில் உள்ள ஆசாத் நகர், மருதங்காவெளி, மன்னை சாலை. குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், பெரிய கடைத்தெரு, நீயூ பஜார், மரைக்காயர் தெரு, தெற்கு தெரு, பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை வீட்டிலும் கடைகளிலும் நேரடியாக சந்தித்து பேசினார். பின்னர் அவர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அதே போல் முத்துப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், குன்னலூர், பாண்டி, நாச்சிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள தொண்டர்களையும் சந்தித்து ஆலோசிக்கப்பட்டது.
அதே போல் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான காங்கிரசார் திரண்டு சந்திக்க வந்த குழுவிற்கு வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மு.முகைதீன் பிச்சை
முன்னால் மாவட்ட செயலாளர் பகுருதீன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கமணி, ராமைய்யன், நகர நிர்வாகிகள் முகம்மது மைதீன், அபுல்ஹசன், ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பேட்டை கோபி, கொரடாச்சேரி வட்டார நிர்வாகிகள் முத்துகுமார், மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Post a Comment