வடகிழக்கு பருவ மழை காலத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் மதிவாணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், பொது பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வில்லாலன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர் பேசுகையில், வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் கண்காணப்புடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக பொதுக்பணி துறை, வேளாண்துறை, மின்சார துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, மருத்துவதுறை போன்ற முக்கிய துறைகள் அனைத்தும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

Post a Comment