திருத்துறைப்பூண்டி TNTJ சார்பகா தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

11/04/20140 comments




திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அக்டோபர் 15ம்தேதி முதல் நவம்வர் 15ம் தேதி வரை நடைபெறுகிற தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தை முன்னிட்டு விட்டுக்கட்டி கிளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி முகம்மது ஆசீப் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் முகம்மது மிஸ்கீன், கிளை தலைவர்கள் சேக்உசேன், அன்வர்தீன், ரசூல்முகம்மது, சேக் அப்துல்லா, முகம்மது இக்பால் முன்னிலை வகித்தனர். ரிஸ்வான் ரத்ததானம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

திருவரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் ஆனந்தகுமார் தலைமையில் ரத்த சேகரிப்பு பணி மேற்கொண்டனர். 37 நபர்கள் ரத்ததானம் செய்தனர். மாவட்ட பேச்சாளர் பீர்முகம்மது, மாவட்ட செயலாளர் அப்துல்மாலீக், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். மருத்துவ அணி செயலாளர் செய்யது ரிகான் நன்றி கூறினார்.


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech