முத்துப்பேட்டை அருகே கடற்கரை விளையாட்டு போட்டி

11/05/20140 comments


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு கற்பகநாதர் கோயில் மைதானத்தில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான கடற்கரை கால் பந்து மற்றும் கபடி, கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி அம்பிகாபதி தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். ஒன்றியகுழு தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமார் வரவேற்று பேசினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன்,  ஊராட்சி தலைவர் ஜெயராமன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இளையராஜா, தங்கையன், உள்பட பலர் பேசினர். மாவட்ட ஹாக்கி பயிற்றுனர் ரோஸ் பர்ததிமா மேரி நன்றி கூறினார்.

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech