முத்துப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் இலங்கையில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிற்கும் தமிழக மீனவர்கள் ஐந்து பேரை மீட்க கோரியும், இலங்கை அரசின் சார்வதிகார போக்கைக் கண்டித்தும் நேற்று மாலை ஆசாத் நகர் மீனவர்கள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், குத்புதீன், மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட துணைத் தலைவர் முகம்மது அலீம், ஒன்றிய தலைவர் நைனாமுகம்மது, நகர செயலாளர்கள் வக்கில் தீன் முகம்மது, சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துக்கொண்ட மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி பேசுகையில்: ‘இலங்கை அரசின் கொடூர போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது. கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீன்வர்களை ஒரு பொய்யான வழக்கைப் பதிவு செய்து தூக்கு தண்டனை விதித்திற்பது தமிழக மக்களுக்கு வேதனையைத் தந்துள்ளது.
அதற்காக ஒரு வாரமாக மனித நேய மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களைப் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. தமிழக மீனவர்களை தமிழக சிறைக்கு கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறி இருக்கிறது. அதனால் அந்த ஐந்து மீனவர்களுக்கு தண்டனை ரத்து செய்ய போவதில்லை. தமிழக மீனவர்களைத் தமிழக சிறைக்கு மாற்றுவது முக்கியமல்ல.
தூக்கு தண்டனையை நிரந்தறமாக ரத்து செய்வதுதான் முக்கியம். சமீபத்தில் சுப்பிரமணிய சாமி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசியதாகவும், ஐந்து மீனவர்களை விடுவிக்க கூறியதாகவும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியா? சுப்பிரமணிய சாமியா? என்று இவ்வாறு கேள்விகளை எழுப்பி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னால் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக், நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் செல்வம், விடுதலை சிறுத்தைக்கட்சி நிர்வாகிகள் வெற்றி, மீனாட்சி சுந்தரம், மகாலிங்கம், மீனவர் சங்க இயக்குனர் ஜின்னா உட்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முடிவில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முகம்மது பைசல் நன்றி கூறினார்.
தகவல். மு.முகைதீன் பிச்சை





Post a Comment