திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை காப்பாற்ற கோரியு ம், இது சம்பந்தமாக மெத்தன போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்தும் திருத்துறைப்பூண்டியில் உள்ள உரிமையியல், குற்றவியல், விரைவு ஆகிய மூன்று நீதிமன்றங்களை
சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் கோர்ட் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித் தார். செயலாளர் ரஜினி, பொருளாளர் தீன்முகம்மது ஆகியேர் முன்னிலையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் புறக்கணிப்பு செய்ததால் 3 நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது

Post a Comment