திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வணசரகதுக்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் அருகே உள்ள மண்ணுக்கு முண்டான் மற்றும் கருணாவூர் கிராமங்களில் சட்ட விரோதமாக பறவைகள் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
அதனையடுத்து திருவாரூர் மாவட்ட வனஅலுவலர் பார்த்திபன் உத்தரவுப்படி முத்துப்பேட்டை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மன்னார்குடி வனசரக அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனவர் அயூப்கான், வனகாவலர் ஜான்சன் கென்னடி, தோட்ட காவலர் சிவனேசன் ஆகியோர் சமந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் கருணாவூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கண்ணிவைத்து மடையான் பறவைகளை பிடித்த கருணாவூர் தெற்கு தெருவில் வசிக்கும் மருதமுத்து மகன் சுந்தர்(28) சிக்கினர். அவரை கைது செய்து அவரிமிருந்து பறவைகள் மீக்கப்பட்டு ரூபாய் 8ஆயிராம் தொகை அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதேபோல் மண்ணுக்கு முண்டான் பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்ணிவைத்து பறவைகளை பிடிக்க முயற்சித்த மாதாகோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் விக்டர்(30) சிக்கினார்.
கைது செய்து அவரிடமிருந்து 5ஆயிரம் அபராத தொகை வசூல் செய்யப்பட்டது.
நன்றி:முகைதீன் பிச்சை ரிப்போட்டர்

Post a Comment